Ticker

6/recent/ticker-posts

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு



பெயர் - ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு
முகவரி - கலாசார மண்டப வீதி, அக்கரைப்பற்று - 7/4, 
இலங்கை 

தொலைநோக்கு

பிரதேச வாழ் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம், சகவாழ்வு, ஆன்மீக வாழ்வு மற்றும் இறைபணி மேம்பாடு என்வற்றினை விரிவுபடுத்தல் தொடர்பான பணிகளை சுயநலம் கருதாது வளமான பிரதேச வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான சமூக நலன் சேவைகளை மேற்கொள்ளல்.

பணிநோக்கு

பிரதேச வாழ் மக்களின் சமூக நலன்களுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவை கருதி செயற்படல். பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது பிரதேச செயலாளருடன் ஒருங்கிணைந்து செயற்படல். பிரதேசத்தில் டெங்கு மற்றும் அத்தகைய தன்மையான நோய் தொடர்பாக விடயங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல். புனித தலங்களில் அன்னதானம் வழங்கல். பிரதேசம் மற்றும் புனித தலங்களில் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளல். அரச சட்ட செயற்பாடுகளுக்கமைவாக அவற்றிற்கு மதிப்பளித்து  செயற்படல். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் இறப்பு தொடர்பாக அபரக்கிரியைகளுக்கு உதவிக்கரம் நீட்டல் தொடர்பான செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தல்.

பொதுச் சபைக்கான அங்கத்துவம்

ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளில் வாழ்கின்ற சமூகநலன் சேவைகளில் சுயமாக ஈடுபட விரும்புகின்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலாரும் அங்கத்துவம் பெறலாம். 

மேற்குறிப்பிட்டுள்ள தொலைநோக்கு, பணிநோக்கு அதன் நடைமுறைகள் மற்றும் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க விரும்புவோரே பொதுச்சபையில் உறுப்பினராகலாம்.

Post a Comment

0 Comments