Ticker

6/recent/ticker-posts

உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற அன்னதானப்பணி

2023.07.18ஆந் திகதி உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களின் நலன்கருதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களினதும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளினதும் நிதிப்பங்களிப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆடி மாதம் 31ஆந் திகதி தொடக்கம் ஆவணி மாதம் 02ஆந் திகதி வரை மூன்று நாட்களாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், இவ்வாண்டு ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு நான்கு கட்டங்களாக மாபெரும் அன்னதானம் வழங்கும் பணி இறையருளால் இனிதே நிறைவுபெற்றது.

அத்தோடு, ஆலய தீர்த்தோற்சவ தினமான ஆவணி மாதம் 02ஆந் திகதி பக்தர்களை ஒழுங்குபடுத்தும் சிரமமான பணியினை வலம்புரியோன் மற்றும் சிவதொண்டர் அமைப்புக்களுடன் இணைந்து முன்னேடுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது) 





📽️ காணொளி (Video) 🔻



Post a Comment

0 Comments