Ticker

6/recent/ticker-posts

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

2023.10.06ஆந் திகதி பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் மூலமாக வைத்தியசாலையில் பல அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம உள்ளக கணக்காய்வாளர்) அவர்களின் ஆலோசனையிலும் பனங்காடு வைத்தியசாலை சுற்றுச்சூழலை துப்பரவு செய்யும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சிரமதானத்திற்கான முழுமையான ஒத்துழைப்பை பனங்காடு பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்தினர் வழங்கியதுடன், குறித்த செயற்பாடுகளை பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் திருமதி.சிவராஜ் குணாளினி அவர்கள் முன்னின்று செயற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Post a Comment

0 Comments