ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரால் நிவாரணம் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிவாரணப் பணி சிறப்பாக நடைபெறுவதற்கு நிதியுதவி மற்றும் உணவினை வழங்கியவர்களுக்கும், ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் ஐயா அவர்கள், ஒழுங்கமைப்பினை செய்துதந்த அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் வசந்தன் அவர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் உறுப்பினர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது அமைப்பின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவி வழங்கியவர்களின் விபரம் மற்றும் செலவின அறிக்கை என்பன இணைக்கப்பட்டுள்ளது.
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji