Ticker

6/recent/ticker-posts

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அவர்கள் எமது சமூகநலன் அமைப்பு ஆற்றிவரும் சேவையினைப் பாராட்டி நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி கௌரவித்த நிகழ்வு

2023.04.23ஆந் திகதி ஆலையடிவேம்பு வடக்கு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவின் போது சமுர்த்தி வங்கியின் உத்தியோகத்தர்களின் அழைப்பினை ஏற்று எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன்  அமைப்பின் தலைவர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையின் கீழ் எமது உறுப்பினர்கள் நடுவர்களாக கடமையாற்றினர்.

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பு ஆற்றிவரும் சேவையினைப் பாராட்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அவர்களினால் நினைவுச்சின்னம்  ஒன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.


நிகழ்வின் இறுதியாக வங்கி உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது) 







📽️ காணொளி (Video) 🔻


Thank you Dan News 












Post a Comment

0 Comments