Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

2024.02.16ஆந் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் அக்கரைப்பற்று பொது மயானத்தில் மாபெரும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மாபெரும் இச்சிரமதானப்பணியில் அக்கரைப்பற்று மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கம், ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம் மற்றும் பொது நலன் விரும்பிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது மயானமானது பராமரிப்பற்ற நிலையில் பற்றைகாடுகள் மற்றும் புற்கள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டதுடன், டெங்கு நோய் பரவும் சூழலும் காணப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது மயான பகுதியில் காணப்பட்ட சிறிய பற்றைகாடுகள் மற்றும் புற்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது

இச்சிரமதானப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினர் காலை ஆகாரத்தை வழங்கிவைத்ததையும் குறிப்பிடத்தக்கது. 

இப்பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது








📽️ காணொளி (Video) 🔻



Thank you Dan News








Post a Comment

0 Comments