பனங்காடு பிரதேச வைத்தியசாலை நிருவாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க 2024.04.26ஆம் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும், அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் ஆலோசனையிலும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதியில் சிரமதானப்பணி மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டது.
இச்சிரமதானப் பணிக்கு முழுமையான ஒத்துழைப்பை பனங்காடு பிரதேச வைத்தியசாலை நிருவாகத்தினர் வழங்கியதுடன், குறித்த செயற்பாடுகளை பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் வைத்தியர் திருமதி.சிவராஜ் குணாளினி அவர்கள் முன்னின்று செயற்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji