''தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு'' 2024.06.03ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பகுதிகளில் கடற்கரை பகுதியை துப்பரவு செய்யும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் தலைமையில் கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணியில் அக்கரைப்பற்று 241ஆம் காலாட்படைப்பிரிவின் அதிகாரிகளுடன் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கடற்கரை பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள், சிரட்டைகள், பொலித்தீன் பைகள், குப்பைகள் போன்ற கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டது. (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
📽️ காணொளி (Video) 🔻
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji