2023.07.05ஆந் திகதி உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வில் கலந்து கொண்ட பக்த அடியார்களின் நலன்கருதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பொது மக்களினதும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளினதும் நிதிப்பங்களிப்புடன் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆடி மாதம் 06ஆந் திகதி, 21ஆந் திகதி மற்றும் தீர்த்தோற்சவ தினமான 22ஆந் திகதியுடன் இவ்வாண்டு ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு நான்கு கட்டங்களாக மாபெரும் அன்னதானம் வழங்கும் பணி இறையருளால் இனிதே நிறைவுபெற்றது.
அத்தோடு, ஆலய தீர்த்தோற்சவ தினமான ஆடி மாதம் 22ஆந் திகதி இன்று பக்தர்களை ஒழுங்குபடுத்தும் சிரமமான பணியினை வலம்புரியோன் தொண்டர் அமைப்புக்களுடன் இணைந்து முன்னேடுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji