Ticker

6/recent/ticker-posts

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற மாபெரும் சிரமதானப்பணி

கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வந்த கழிவுப்பொருட்கள் காரணமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்சூழல் பகுதி அசுத்தமடைந்து காணப்பட்டது. இக்கழிவு பொருட்களை முழுமையாக அகற்றி துப்பரவு செய்வது அவசியமான தேவையாக இருந்தது. 

அந்தவகையில் 2024.12.13ஆந் திகதி  எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் கீழ் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றியதுடன், மேலதிகமான குப்பைகளை உழவு இயந்திரத்தின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது.

இச்செயற்பாடு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெறுவதற்கு  ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் உறுப்பினர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.













Post a Comment

0 Comments