“கிளீன் ஶ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  "அழகான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்''  எனும் தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கடற்கரைப் பகுதியை துப்பரவு செய்யும் சிரமதானப் பணி 2025.02.16ஆந் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இச்செயற்பாடு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் தலைமையில் கடற்கரை பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் பணியில் அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ காலாட்படைப்பிரிவின் அதிகாரிகளுடன் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்கள், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடற்கரை பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள், சிரட்டைகள், பொலித்தீன் பைகள், குப்பைகள் போன்ற கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டது.